Wednesday, October 28, 2026

ஜிவி பிரகாஷுக்கு துரோகம் செய்தாரா தனுஷ் ! ரசிகர்கள் அதிர்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக கருதப்பட்ட தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இடையே நட்புக்கு இலக்கணம் என்ற டயலாக் மூலம் சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தனுஷ் தனது நெருங்கிய நண்பர்களில் ஜிவி பிரகாஷ் தான் சிறந்தவர் என்று கூறியிருந்தார். ஆனால், இந்த நண்பர்கள் இடையே ஊழல் மற்றும் துரோகம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி வெளியிட்ட பேட்டியில், தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இடையே நடந்த சில சம்பவங்களைப் பற்றி கூறியுள்ளார். அதில், “தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், அந்த நட்பு இப்போது இல்லை. பல தயாரிப்பாளர்கள் ஜிவி பிரகாஷுக்கு இசை அமைக்க அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, நடுவில் தனுஷ் புகுந்து அந்த வாய்ப்புகளை காலி செய்துள்ளார். அதற்கு பதில் அனிருத்தை அந்த படத்தில் போட சொல்லி புரோமோட் செய்துள்ளார். இதனால் ஜிவி பிரகாஷ் கடுப்பில் சோஷியல் மீடியாவில் தனுஷை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இதேபோல், ஒரு பிரபல செய்தித்தாள் விஜயை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தது. அவரிடம் ஒரு முழு பக்க பேட்டியை போட வேண்டும். அதற்கு விஜயை தொடர்பு கொள்ள ஜிவி பிரகாஷிடம் அந்த குழு தூது போய் இருந்தது. ஆனால், அவரும் ஒரு வாரம் இழுத்துவிட்டு, நீங்களே பார்த்துக்கோங்க என்று கூறிவிட்டார். அடுத்த நாள் பேட்டி வெளியானது. அதில் சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனால் ஜிவி பிரகாஷ் கோபத்தில், நேற்று வரை விஜய் என்று என்கிட்ட தானே கேட்டீங்க. இப்போ என்ன தனுஷ் மாறி இருக்காரு என்று நேரடியாகவே தாக்கினார்.

இந்த சம்பவங்கள் நடந்த பிறகு, அனிருத்துக்கும், தனுஷுக்கும் சண்டை வந்து அவர்கள் பிரிந்தனர். இதனால் தனுஷ் ஜிவி பக்கம் வந்துவிட்டார். இருவர் சண்டையை வெற்றிமாறன் தீர்த்து வைத்த பின்னரே மீண்டும் இருவரும் நண்பர்களாக பழகி வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த தகவல்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நெருங்கிய நண்பர்கள் இடையே இப்படியெல்லாம் நடக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.”

இந்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT