Wednesday, October 28, 2026

வாழைப்பூ சட்னி செய்முறை மற்றும் அதன் பயன்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

வாழைப்பூ என்பது ஒரு சத்தான மற்றும் சுவையான உணவுப் பொருளாகும். இதனைப் பல்வேறு வழிகளில் சமைத்து சாப்பிடலாம். இன்று வாழைப்பூ சட்னி செய்முறை மற்றும் அதன் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ADVERTISEMENT

மல்லி – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
உளுந்து – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 15 பல்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்
வாழைப்பூ – 1 பூ
செய்முறை

வாழைப்பூவை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சிவந்ததும் மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
அதே எண்ணெயில் வாழைப்பூவை வதக்கவும். வாழைப்பூ அரை பதத்தில் வெந்தவுடன் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியவுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து நன்கு ஆற வைத்து அரைத்து எடுக்கவும்.
பயன்கள்

வாழைப்பூவில் உள்ள சத்துக்கள் நம் உடலில் பல அதிசயங்களை செய்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் நல்லது.

கருப்பை: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும், கருப்பையை வலுப்படுத்தும், குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை தொடர்ந்து நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரகம்: சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கற்களை கரைக்கும் தன்மை வாழைப்பூவிற்கும், வாழைத் தண்டிற்கும் உள்ளது.
சர்க்கரை நோயாளிகள்: வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு தன்மை ரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
மேலும், வாழைப்பூ வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றத்தையும் போக்க கூடியது. எனவே வாரத்தில் மூன்று நாட்கள் ஆவது வாழைப்பூவை சட்னி அல்லது வேறு ஏதேனும் வகைகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான வாழைப்பூ சட்னி

வாழைப்பூ சட்னி செய்வதற்கு முதலில் வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதை நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூவின் கசப்பு தன்மை குறையும்.

வாழைப்பூ சுத்தம் செய்து ஊற வைத்த பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்க்க வைக்கவும். பின்னர் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.

வறுத்த மசாலாவுடன் வாழைப்பூ சேர்த்து வதக்கவும். வாழைப்பூ அரை பதத்தில் வெந்ததும் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் வதங்கிய பிறகு உப்பு மற்றும் புளி சேர்த்து நன்கு கிளறி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் வாழைப்பூ சட்னியை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். சுவையான வாழைப்பூ சட்னி தயார்.

இந்த சட்னியை இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT