விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படம் ஜெமினி மேன் படத்தின் காப்பி தான் என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் திரை விமர்சகர் பிஸ்மி கூறியதாவது:
“பொதுவாக புக் படிக்காதவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறனே இருக்காது. அப்படிப்பட்ட வெங்கட் பிரபு தனியாக சிந்தித்து எடுப்பாரா? வெளிநாட்டு படங்களை பார்த்து அதன் இன்ஸ்பிரேஷனில் தான் படத்தினை எடுப்பார்.
கோட் படமும் ஜெமினி மேன் படத்தின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால் அதை இப்போவே ஒப்புக்கொண்டால் படத்தின் கதை எல்லாருக்குமே தெரிந்துவிடும். அது கோட் படத்தின் மீதான சுவாரஸ்யத்தினை காலி செய்துவிடும். அதனால் கூட அவர்கள் படத்தின் உரிமையை வாங்கியும் சொல்லாமல் இருக்கலாம்.
மாநாடு படமே எ டே என்ற படத்தின் காப்பி தான். கிட்டத்தட்ட கோட்டும் நம்ம கல்சருக்கு ஏற்ற போல மாற்றி எடுக்கப்படும். முயற்சி வித்தியாசமாக இருந்தாலும் கூட அது சொந்த கதையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். காப்பி அடித்து எடுத்தால் நல்லா இருக்காது.”
பிஸ்மியின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், வெங்கட் பிரபு இந்த சர்ச்சைக்கு விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
