Tuesday, February 24, 2026

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் மகிழ்ச்சி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டிக்கிலோனா’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த தகவல் சந்தானம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.கர், ரவிமரியா, மொட்ட ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ‘விட்னஸ்’ திரைப்பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ராஜேஷ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT