நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று (ஜன. 07) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஷபாலி வர்மா 1 ரன், மந்தனா 23 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஜெமிமா 13 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன், ரிச்சா கோஷ் 23 ரன், வஸ்த்ரகர் 9 ரன், அமன்ஜோத் கவுர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய கேப்டன் அலிசா ஹீலி 26 ரன்னும், பெத் மூனி 20 ரன்னும் எடுத்து நிலையில், தொடர்ந்து களமிறங்கிய தஹிலா 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். சிறப்பாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், டி20 தொடரில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. மூன்றாவது மற்றும் இறுதி போட்டி நாளை (ஜன. 09) நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமானவர்கள்
கேப்டன் அலிசா ஹீலி – 26 ரன்கள்
பெத் மூனி – 20 ரன்கள்
எல்லிஸ் பெர்ரி – 34 ரன்கள் (ஆட்டமிழக்கவில்லை)
இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள்
திறமையான தொடக்க ஆட்டக்காரர்களின் தோல்வி
மற்ற வீராங்கனைகளின் மோசமான ஆட்டம்
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு
