Wednesday, October 28, 2026

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இதனால் தான் நான் நடிக்கல ? ஓபன் டாக் கொடுத்த அருண்விஜய்.!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் வெளியான தடையற தாக்க, தடம் ஆகிய படங்களில் நடித்து மகிழின் ஆஸ்தான ஹீரோவாக வலம் வருகின்றார் அருண் விஜய். மேலும் என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து அவருடனும் நல்ல பழக்கத்தில் இருக்கின்றார் அருண் விஜய்.

ADVERTISEMENT

எனவே மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படம் உருவாவதாக அறிவிப்பு வந்தவுடன் இப்படத்தில் அருண் விஜய் கண்டிப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தில் அருண் விஜய் நடிக்கவில்லை.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பதை பற்றி அருண் விஜய் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,

“மகிழ் திருமேனி அஜித்தை இயக்கப்போகின்றார் என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அப்படத்தில் என்னை நடிக்குமாறு மகிழ் திருமேனி கேட்கவில்லை. ஒருவேளை பாலாவின் இயக்கத்தில் நான் வணங்கான் படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால் தான் மகிழ் திருமேனி என்னை அழைக்கவில்லை என நினைக்கின்றேன்.

வணங்கான் படத்தின் பணிகள் முடிந்த பிறகு மகிழ் திருமேனி என்னை அழைத்தால், விடாமுயற்சி படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்” என கூறினார் அருண் விஜய்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT