Wednesday, October 28, 2026

தன்மானத்தை விட்டுக் கொடுக்காத அஜித் ! கலைஞர் 100 விழாவில் AK வராததற்கான முக்கிய காரணமே இதுவா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் இருபெரும் தூண்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன்களுக்கு அடுத்தபடியாக, விஜய், அஜித் ஆகிய இருவரும் மாஸ் நடிகர்களில் முக்கியமானவர்கள். இருவரும் ஒன்றாக சம காலத்தில் சினிமாவில் பயணிக்கத் தொடங்கியவர்கள். இன்றுவரை சமமான வெற்றி தோல்விகளைப் பார்த்து வருகிறார்கள்.

இருவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும், இருவரும் கலைஞர் 100 விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய், அஜித் ஆகிய இருவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

ADVERTISEMENT

இது குறித்து, வலைப்பேச்சு அந்தனன் தனது பேட்டியில் கூறியதாவது:

“கலைஞர் 100 விழாவின் அழைப்பிதழ் பிரம்மாண்டமாக அடிக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினி, கமல் பெயரையும் போட்டு அவர்களுக்குண்டான மரியாதையை கொடுத்திருந்தார்கள். அவர்களுக்கு அடுத்த படியாக இமயமாக வளர்ந்து வருபவர்கள் அஜித், விஜய். அவர்கள் பெயரையும் சேர்த்து போட்டிருந்தால், ஒரு வேளை அதற்கு மரியாதை கொடுத்தாலாவது விஜய் வந்திருப்பார். ஆனால் அஜித் வந்திருப்பாரா என்று தெரியவில்லை. இதை செய்ய தவறிவிட்டார்கள்.”

அந்தனன் கூறியது உண்மையாக இருந்தால், விழா ஏற்பாட்டாளர்கள் செய்த தவறுதான் விஜய், அஜித் இருவரையும் விழாவில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது என்று கூறலாம்.

இருப்பினும், விஜய், அஜித் ஆகிய இருவரும் தங்கள் சொந்த காரணங்களுக்காக விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறவும் வாய்ப்பு உள்ளது. அந்த காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT