Wednesday, October 28, 2026

சொன்னது சொன்னபடியே நாளை முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

15வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்கள் 4மாத நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக, அரசுடன் ஏற்கனவே இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த 5 ஆம் தேதி பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ‘நிதி கூடுதலாக செலவாகும் சில கோரிக்கைகள் குறித்து நிதித்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எட்டிய பிறகுதான் அறிவிக்க முடியும்’ என்று அமைச்சர் சிவசங்கர் தொழிலாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (ஜனவரி 8) தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் ஊழியர்களின் கோரிக்கை குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவசர ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான இன்றைய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஜன.08) முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

வேலை நிறுத்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள்

அரசு போக்குவரத்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்.
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரும்.
வேலை நிறுத்தத்தை தவிர்க்க அரசு என்ன செய்ய வேண்டும்?

ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
இரு தரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தீர்வு காண வேண்டும்.
வேலை நிறுத்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT