Wednesday, October 28, 2026

கருப்பு ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

ஏலக்காய் என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகை ஆகும். இது நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஆன்டி பயாடிக்ஸ், ஆன்டி இன்பல்மேட்டரி பொருட்கள் ஆகியவை நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன.

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ADVERTISEMENT

வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. ஏலக்காயில் உள்ள டெட்டர்பீன்ஸ் என்னும் பொருள் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. ஏலக்காயை கசாயம் போல செய்து குடித்து வந்தால் ஜலதோஷம், இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
அஜீரண கோளாறுகளை குணப்படுத்துகிறது. அஜீரண கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் அஜீரண கோளாறு குணமாகும்.
மார்பு சளியை வெளியேற்றுகிறது. மார்பு சளியால் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஏலக்காயை தேநீர் அல்லது பாயாசத்தில் சேர்த்து சாப்பிட்டால் மார்பு சளி வெளியேறும்.
விரைப்புத்தன்மையை அதிகரிக்கிறது. விரைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்படும் ஆண்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது. ஏலக்காயில் உள்ள சினியோல் என்னும் வேதிப்பொருள் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
ஆண்மையை அதிகரிக்கிறது. ஏலக்காயை அடிக்கடி தேநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். மேலும் நரம்பு தளர்ச்சி சரியாகி நரம்புகள் வலுபெறும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ஏலக்காயில் உள்ள டெட்டர்பீன்ஸ் என்னும் பொருள் நமது உடலின் மெட்ட பாலிசத்தை அதிகரிக்க செய்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
கொழுப்பைக் குறைக்கிறது. ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
புற்றுநோய் செல்களை அழைக்கிறது. உணவில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளும் போது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்தும் கருப்பு ஏலக்காய் கசாயம்

தேவையான பொருட்கள்:

கிராம்பு – 2
கருப்பு ஏலக்காய் (இடித்தது) – 4-5
இஞ்சி (துருவியது) – 1 டீ ஸ்பூன்
துளசி இலைகள் – 5-6
தண்ணீர் – 3-4 கப்
செய்முறை:

முதலில் ஏலக்காய், கிராம்பை இடித்து ஒரு கடாயில் போட்டு வறுக்கவும்.
பிறகு தண்ணீர், இஞ்சி சேர்த்து கொதிக்க விட்டு துளசி இலைகளை போட்டு 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு கப்பில் வடிகட்டி பருகி வரவும்.
இந்த கசாயம் தினமும் இரண்டு முறை குடித்து வர ஆஸ்துமாவின் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவும்.

கருப்பு ஏலக்காயை எவ்வாறு பயன்படுத்துவது?

கருப்பு ஏலக்காயை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

தேநீர்: தேநீரில் கருப்பு ஏலக்காயை சேர்த்து குடிக்கலாம்.
பாயாசம்: பாயாசத்தில் கருப்பு ஏலக்காயை சேர்த்து செய்யலாம்.
கசாயம்: கருப்பு ஏலக்காயை கசாயம் போல செய்து குடிக்கலாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT