பண்டிகை தினம் என்றாலே அனைவரது எண்ணமும் புதுப்படங்கள் பார்க்காமல் முழுமை பெறாது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் படங்கள் பற்றி காணலாம்.
கேப்டன் மில்லர்
தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் நடித்துள்ள வரலாற்று கதையில் வெளியான ட்ரெய்லரை பார்க்கும் போது கேப்டன் மில்லர் இந்த முறை நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயலான்
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர்,பானுப்ரியா நடித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது தரமான தமிழ் ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல் ஏற்படுவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
மிஷன் சாப்டர் 1
அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் நடித்துள்ள இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
மேரி கிறிஸ்துமஸ்
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், சஞ்சய் கபூர், வினய் பகத், ராதிகா ஆப்தே நடித்துள்ள இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
குண்டூர் காரம்
மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.
நா சாமி ரங்கா
நாகார்ஜூனா, மிர்னா மேனன், ஆஷிகா ரங்கநாத், அல்லரி நரேஷ் நடித்துள்ள இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளன. மேலும் இதில் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் என அனைத்து தரப்பினரும் முன்னணி பிரபலங்கள் உள்ளனர். எனவே இந்த பொங்கல் பண்டிகை திரையுலகில் மிகப்பெரிய சரித்திரத்தை படைக்க வாய்ப்பு உள்ளது.
