Sunday, February 22, 2026

ரஜினி விஜய் படங்களை மண்டியிட வைத்த அஜித் ! அஜித் செய்த ரியல் சம்பவம் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் இரு முன்னணி நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித் குமார். இவர்கள் இருவரும் தங்கள் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். வயதுக்கு அப்பாற்பட்ட தங்களது திறமையால் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர்.

ரஜினிகாந்த் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். அவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் புது உத்வேகம் பெற்றுள்ள ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். வேட்டையன், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் நடிக்கவுள்ளார். இதுமட்டுமல்லாமல் நெல்சன், கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களின் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கயிருக்கின்றார்.

ADVERTISEMENT

அஜித் குமார் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது படங்கள் எல்லாம் தீவிரமான கதைக்களத்துடன், விறுவிறுப்பான திரைக்கதையுடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெறுகின்றன. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டு அஜித் நடித்த விஸ்வாசம் மற்றும் ரஜினி நடித்த பேட்ட ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. விஸ்வாசம் திரைப்படம் தந்தை மற்றும் மக்கள் சென்டிமென்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. எனவே இப்படத்தை குடும்பம் குடும்பங்களாக பார்த்தனர். மறுபக்கம் பேட்ட மாஸ் ஆக்ஷன் படமாக வெளியானது. இப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

உலகளவில் ரஜினியின் பேட்ட திரைப்படம் 230 கோடி வசூலித்தது. அதைப்போல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் உலகளவில் 205 கோடி வசூலித்ததாக தகவல் வந்துள்ளது. என்னதான் ரஜினியின் பேட்ட திரைப்படம் வசூலில் முன்னிலையில் இருந்தாலும் இரு படங்களும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களின் வெற்றி ரஜினி மற்றும் அஜித் ஆகியோரின் திறமையை மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் வலிமையையும் காட்டுகிறது. வயதுக்கு அப்பாற்பட்ட திறமையால் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வரும் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் எதிர்காலத்திற்கு ஒரு உத்வேகம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT