தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் நடிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அஞ்சலி அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. இந்த வதந்தி அஞ்சலி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியது: “சினிமாவில் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப் பற்றி யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில், நடிகர் ஜெய்யை காதலித்ததாகச் செய்தி வந்தது. இப்போது தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக பரப்புகிறார்கள்.
நடிகை என்றால் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாமா? நான் இன்னும் சிங்கிள்தான். யாரையும் காதலிக்கவும் இல்லை. திருமணமும் செய்யவில்லை. அவ்வப்போது என்னைப் பற்றி வரும் வதந்தியால் எனது குடும்பத்தார் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் புரளி கிளப்புகிறவர்களுக்கு இதில் அக்கறை கிடையாது.
எனது திருமணம் குறித்த உண்மையான தகவல் என்னால் மட்டுமே தெரியும். அதை நான் எப்போது திருமணம் செய்துகொண்டாலும், அதை நான் பொதுவில் அறிவிப்பேன். அதுவரை, என்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று அஞ்சலி கூறினார்.
அஞ்சலியின் இந்த பேட்டி, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
