சின்னத்திரை மூலமாக பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையிலும் துணை நடிகராக வலம் வருபவர் ராகுல் ரவி. இவர் மீது அவரது மனைவி லட்சுமி நாயர் கொடுத்த புகாரில், அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், அவருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ராகுல் ரவிக்கு 2020-ம் ஆண்டு லட்சுமி நாயருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் காதல் திருமணமாக கூறப்படுகிறது. திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதி தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
ராகுல் ரவியின் மனைவி லட்சுமி நாயர், தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதுவும் அவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
லட்சுமிக்கு அவரது நண்பர்கள் மூலம் ராகுல் ரவிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து லட்சுமி தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு ராகுல் ரவி மனைவி லட்சுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறையினரை தனது வசிக்கும் இடத்திற்கு அழைத்து வந்து தனது கணவர் செய்யும் தவறுகளை வெளிச்சம் போட்டு காட்டினார் லட்சுமி நாயர். இதனை அடுத்து காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதற்கு முன்பாகவே ராகுல் ரவி இவ்வழக்கில் இருந்து வெளிவருவதற்கு முன்ஜாமீன் கோரி இருந்தார். அந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். இருப்பினும் அவரைக் கண்டதும் பிடிக்க வேண்டும் என்ற வகையில் நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீசை அனுப்பியது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்தபடியே நடிகர் ராகுல் ரவி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ராகுல் ரவியின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில், ராகுல் ரவி 10 லட்சம் ரூபாய் பிணையில் முன்ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். மேலும், வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ராகுல் ரவியின் முன்ஜாமீன் உத்தரவு, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
