கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “துணிவு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, அஜித்தின் அடுத்த படமான “விடாமுயற்சி” படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அங்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அண்மையில் படப்பிடிப்பிற்கு இடைவெளி விடப்பட்டது. இதனையடுத்து, அஜித் தனது குடும்பத்தினருடன் துபாய் சென்று புத்தாண்டை கொண்டாடினார். அங்கு அஜித் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.
தற்போது, அஜித் மீண்டும் அஜர்பைஜான் திரும்பியுள்ளார். இதனையடுத்து, அங்கு “விடாமுயற்சி” படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
