மலையாளத்தில் முன்னணி நடிகரான பிருத்விராஜ், சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு ரசிகர் அஜித்குமாரைப் பற்றி கேட்டார். அதற்கு பதிலளித்த பிருத்விராஜ், அஜித்தை பாராட்டி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அஜித்தை சந்திக்க விரும்பியதாகவும், பின்னர் சூர்யாவின் புது வீடு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் அஜித்துடன் நெருக்கமாக பழகியதாகவும் பிருத்விராஜ் கூறியுள்ளார். அதில், அஜித் மிகவும் எளிமையானவர், வெற்றி தோல்வியில் அலட்டிக் கொள்ளாதவர் என்று பாராட்டினார்.
அஜித் பற்றி பிருத்விராஜ் கூறியதாவது:
என் ஆரம்ப காலத்தில் அஜித் உச்சத்தில் இருந்தார். அவரைச் சந்திக்க வேண்டும் என்று பலமுறை முயற்சித்தேன்.
ஒரு நாள் சூர்யாவின் புது வீடு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் அஜித்துடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அஜித் மிகவும் எளிமையானவர், பெரிய பந்தாவும் இல்லாமல் என்னுடன் பேசினார்.
அவரது படங்கள் பெரிய வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, அதனை அவர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
வெற்றி தோல்வியில் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான் அஜித்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
பெரிய ஸ்டாராக இருந்தாலும், எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவது அவரது சிறப்பு.
அஜித் அவர்களிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
பிருத்விராஜ் அஜித்தை பாராட்டி பேசிய இந்த வீடியோவை, ஏகே ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Malayalam Fame Actor @PrithviOfficial Sir
He says that he learnt lessons from the Thala Ajith Sir and Rajinikanth Sir.
He also shared his experience with Ajith.
Watch The Video Fully 😎
Video Credits : Manorama Online#VidaaMuyarchi | #AjithKumar pic.twitter.com/qIFpOy88P1
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) September 14, 2023
