கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், லைகா தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் விடாமுயற்சியில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது குறித்து லைகா நிறுவனம் அபிஸியலாக அறிவிக்கவில்லை. அதேபோல், அஜித்துடன் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து விடாமுயற்சி அப்டேட் கேட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த வாரம் முதல் விடாமுயற்சி அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி, விடாமுயற்சி படத்தின் முதல் அப்டேட் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விடாமுயற்சி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாகவும், இதற்காக பல கோடிகள் வரை பிசினஸ் நடைபெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல், ஓடிடி ரைட்ஸ் பிஸினஸும் தொடங்கியதாகத் தெரிகிறது. இதனை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடித்த துணிவு திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸானது. விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய துணிவு, சிறப்பான ஓபனிங் உடன் பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது. இதனால், விடாமுயற்சி படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸும் இப்போதே தீவிரமாக நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங்கில், ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ், வீடியோஸ் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இதற்கு முன்னர் ரசிகர்கள் அவரை படத்தில் பார்த்துப் பழகியதை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அவரை இப்படத்தில் காணலாம் என்றும் சினிமா வட்டாரதத்தில் பேசபடுகிறதாம். மேலும், இந்த படத்தில் அஜித் குடும்ப உணர்வுகள் குறித்து அதிமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.
அஜீத் குமார் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், விடமுயற்சிக்கு இசையமைக்கிறார். இசையமைப்பாளர் தனது விளையாட்டின் உச்சத்தில் இருக்கிறார், மேலும் அவர் 2023 இன் இரண்டு பெரிய படங்களான ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் ஷாருக்கானின் ஜவான் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருந்தார். இதற்கிடையில், விடமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
முக்கிய அம்சங்கள்
விடாமுயற்சி படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் தாறுமாறாக தொடங்கியது.
படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.
ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் தொடங்கியது.
படத்தின் ஷூட்டிங்
