Wednesday, October 28, 2026

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி: 36 வருட தாமதத்துக்குக் காரணம் என்ன?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் இரு முன்னணி நட்சத்திரங்கள் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம். இவர்கள் இருவரும் இணைந்து இயக்கிய முதல் படம் நாயகன். 1987-ம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக உள்ளது. அதன்பிறகு, இவர்கள் இருவரும் தனித்தனியாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர்கள் கூட்டணியில் படங்கள் வெளியாகவில்லை.

இந்தநிலையில், சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 பாகங்களை இயக்கி வெளியிட்ட மணிரத்னம் அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் பிறந்த நாளான கடந்த நவம்பர் 7-ந் தேதி இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தின் முன்னோட்ட வீடியோவுடன் வெளியான இந்த படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசனுடன் இணைய 36 வருடங்கள் எடுத்துக்கொண்டது ஏன் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் சி.என்.என். நியூஸ் 18 (CNN-News18) இந்தியன் ஆஃப் தி இயர் விருது வழங்கும் நிகழ்வில், பங்கேற்ற மணிரத்னம் பல நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார்.

“கமல்ஹாசனுடன் இந்த ஆண்டுகள் ஏற்பட்ட இடைவெளிக்கு காரணம் முரண்பாடுகள் அல்ல. அவருக்கு தகுந்த ஸ்கிரிப்ட் அயைவில்லை என்பது தான் உண்மை. அவர் ஒரு திறமையான நடிகர். பல விஷயங்களைச் செய்த ஒருவர் உங்களிடம் இருந்தால் அவருக்கு ஸ்கிரிப்ட் செய்வது கடினமாக தான் இருக்கும். குறைந்த பட்சம் அவருக்கான கதையாக இருக்க வேண்டும். முன்பு ஒரு படத்தில் பணியாற்றியதால் மீண்டும் அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது இல்லை.

அவருக்கு தகுந்த கதையாக இருந்தால் மட்டும் தான் அது சாத்தியமாகும். அந்த தருணம் இப்போது வந்துள்ளது. நாங்கள் இணைந்துள்ள அடுத்த படத்தில் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம்” என்று மணிரத்னம் கூறியுள்ளார்.

மணிரத்னத்தின் இந்த விளக்கத்தை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைவது என்பது தமிழ் சினிமாவுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT