தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஒரு படத்திற்கு பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்காக இவர் 12 கோடிதான் சம்பளமாக பெற்றுள்ளார். வருடங்கள் கடந்து செல்ல, இவரது சம்பளமும் உயர்ந்துள்ளது. தனுஷ், கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம்.
அருண் மாத்தீஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கேப்டன் மில்லர் படம், ஒரு உண்மையான கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படத்தில் தனுஷ், காவல் அதிகாரி கதாப்பாத்திரத்திலும் பின்பு போராளி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தனுஷ், கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப்படிகளில் ஏறி வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு இவர் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகின. இதற்கு அடுத்த ஆண்டில் இவரது ‘வாத்தி’ படம் மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இதையடுத்து அவர் நடித்துள்ள படம்தான், கேப்டன் மில்லர்.
தனுஷின் சம்பளம் உயர்ந்ததற்கு, அவரது நடிப்பின் தரம், படங்களின் வெற்றி, ஹாலிவுட்டில் இவருக்கு கிடைத்த அங்கீகாரம் போன்றவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.
