Tuesday, February 24, 2026

ப்பா. ஹாலிவுட்டை மிஞ்சும் கெத்தான லுக்கில் அஜித் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. துணிவு படத்திற்கு பின் அஜித் நடிக்கும் படம் இது.

துணிவு படம் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியானது. ஆனால், ஒரு வருடம் ஆகியும் அஜித்தின் அடுத்த படம் வெளியாகவில்லை. துணிவு படம் வெளியாகி 10 மாதங்கள் கழித்துதான் விடாமுயற்சி பட வேலைகள் துவங்கியது. இடையில் விக்னேஷ் இயக்குனராக நியமிக்கப்பட்டு பின்னர் அவர் தூக்கப்பட்டு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். சொந்த கதை, ஹாலிவுட் கதைகள் என பல கதைகள் விவாதிக்கப்பட்டு கடைசியில் ஒரு கதை உறுதி செய்யப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

ADVERTISEMENT

இப்படத்தின் படப்பிடிப்பு 2 மாதங்களுக்கு முன்பு அசர்பைசான் நாட்டில் துவங்கியது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க முக்கிய வில்லனாக அர்ஜூன் நடித்து வருகிறார்.

விடாமுயற்சி படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அஜித் தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற டீசர்ட், கூலிங்கிளாஸ் அணிந்து செம ஸ்டைலாக இருக்கிறார் அஜித்.

இந்த படம் அஜித்தின் 62-வது படமாகும். இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். ஒளிப்பதிவாளர் ஜோசப் ரூபன். படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்.

விடாமுயற்சி படம் 2023 இறுதியில் அல்லது 2024 ஆரம்பத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT