Wednesday, October 28, 2026

மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் விமர்சனம் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

நீதியைத் தேடி ஒரு மகளின் போராட்டம் ‘ஃபைண்டர்’ படத்தின் விமர்சனம் இதோ !

படம்: ஃபைண்டர் நடிகர்கள்: வினோத் ராஜேந்திரன், பல்லவி சுப்பிரமணியம், சார்லி, நிழல்கள் ரவி,...

ஃபஹத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படத்தின் விமர்சனம் இதோ !

‘ரொமாஞ்சம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஜித்து மாதவன் ‘ஆவேசம்’ படத்தின்...

RomeoMovieReivew :விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ படத்தின் விமர்சனம் இதோ !

நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் திறமையான மிருணாளினி ரவி நடித்த தமிழ்...

டபுள் டக்கர் விமர்சனம் : தவறான டக்கர், குழப்பமான திரைக்கதை!

டபுள் டக்கர் கதை: முகத்தில் தழும்புடன் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் பணக்கார இளைஞன்...
ADVERTISEMENT

மகேஷ் பாபு-திரிவிக்ரமின் கூட்டணி ஒரு மாயாஜாலக் கூட்டணி என்றே சொல்லலாம். இருவரும் இணைந்து உருவாக்கிய அத்தடு, கலேஜா ஆகிய இரண்டு திரைப்படங்கள் தனித்துவமானவை.

தற்போது இருவரும் மூன்றாவது முறையாக ‘குண்டூர் காரம்’ மூலம் சங்கராந்தி ரேஸில் நுழைந்துள்ளனர். திரைப்படத்தின் விளம்பர வீடியோக்களில், மகேஷ் பாபுவின் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் மக்களை கவர்ந்துள்ளது. மகேஷை மிகவும் மாஸாக காட்டியிருக்கிறார்கள் என்பது பாடல்கள் மற்றும் ப்ரோமோக்களை பார்த்தால் புரியும்.

ADVERTISEMENT

மேலும் ‘அலா வைகுந்தபுரமுலோ’ வெற்றிக்குப் பிறகு திரிவிக்ரம் இயக்கும் படம் என்பதால் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்தனை அம்சங்களுடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? மகேஷின் மாஸ் அவதாரம் பார்வையாளர்களை மகிழ்வித்ததா?

தாய்-மகன் பாசக்கதை

குண்டூர் காரம் படத்தின் கதையைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், அம்மா- மகன் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் கதை. வசுந்தரா (ரம்யாகிருஷ்ணா) தன் ஐந்து வயது மகன் ரமணாவை (மகேஷ் பாபு) தனியே விட்டுவிட்டு, மறுமணம் செய்து கொள்கிறாள். இதற்கான காரணங்கள் என்ன? ரமணா வளர்ந்ததும் அம்மாவை சந்தித்தாரா? ரமணாவின் வாழ்க்கையில் தாய் வசுந்தரா மீண்டும் வருகிறாரா இல்லையா என்பது மீதிக்கதை.

ஒரு கதையாக பார்த்தால், நல்ல திரைப்படத்திற்கான களம் தான் இது. கதையின் போக்கில் போதுமான உணர்வுகள் இருக்கிறது.

ஒரு காட்சியில் வசுந்தரா தன் மகனைப் பார்த்து கேட்கிறார், “ஏன் தாடி வளர்க்கிறாய்?”

அதற்கு ரமணா “காதல் தோல்வி” என்கிறார். “யார் அந்த பெண்” என்று வசுந்தரா கேட்க, “நீ” என்கிறார் ரமணா. அம்மா மற்றும் மகன் இடையிலான பாசத்தை தனது பாணியில் சொல்ல முயற்சித்துள்ளார் திரிவிக்ரம். ஐடியா நன்றாக இருந்தாலும் அதை திரைக்கதையாக்கிய விதம் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை.

படத்தின் மையப் புள்ளி வேறு எங்கோ இருக்க, தேவையில்லாத காட்சிகளால் நேரத்தை வீணடித்துள்ளார் இயக்குனர். தாய்-மகன் பாசம் மேலே உள்ள அந்த ஒரு வசனத்தில் மட்டும் தான் உள்ளது, எனவே திரைப்படம் முழுவதும் அதை பார்வையாளர்கள் உணர முடியவில்லை.

மகேஷ் பாபுவின் பிம்பம் மட்டும் போதுமா

கதையை விட மகேஷ் பாபுவின் மாஸ் கதாபாத்திரம் மட்டும் போதுமென நினைத்துவிட்டார் இயக்குநர். இதனால் பல தேவையில்லாத காட்சிகள் படத்தில் உள்ளன. மகேஷ் பாபுவின் ரமணா கதாபாத்திரம் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அவரது கதாபாத்திரத்தோடு பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை.

ரமணாவின் அப்பா சத்யம் (ஜெயராம்) ஒரு காட்சியில் “உன்னுடைய பிரச்சனை என்னவென்று உனக்கே தெரியவில்லை” என்று ரமணாவிடம் சொல்வார், அது உண்மை தான்.

ஹீரோவுக்கு என்ன பிரச்சனை? அவர் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறார்? அவர் இழந்தது என்ன? இதையெல்லாம் பார்வையாளர்களுக்கு சரியாக கூறாமல் அந்த கதாபாத்திரத்தை கடைசி வரை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர்.

மேலும், இந்த கதையில் முக்கிய பிரச்சனை என ஹீரோவுக்கு எதுவும் இல்லை. அம்மாவுடன் உட்கார்ந்து பேசினால் இந்தக் கதை முடிந்து விடும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT