ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்ரி கிறிஸ்துமஸ். இந்தப் படம் இன்று (ஜனவரி 13) வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து விஜய்சேதுபதியின் நண்பரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் கத்ரீனா இருவரின் நடிப்பையும் பார்த்து திகைத்துப் போய் விட்டேன். படத்தில் திரில்லிங்கான திரைக்கதையை கையாண்டுள்ளார் ஸ்ரீராம் ராகவன். படத்தின் கடைசி 30 நிமிடங்களை பார்க்கும் போது ஆல்பர்ட் ஹிட்ச்காக் காலத்திற்கே சென்று விட்டது போல இருந்தது. படத்தின் இசையமைப்பாளர் பிரீத்தமின் இசை இன்னொரு முக்கியமான தூண் என்று சொல்லலாம். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஹாலிவுட் இயக்குனர் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் படங்கள் என்றாலே திகிலும் த்ரிலும் கலந்தவையாக இருக்கும். படம் பார்ப்பவர்களை திகிலில் உறைய வைக்கும். அப்படி ஒரு அனுபவத்தை மெர்ரி கிறிஸ்துமஸ் தந்ததாக விக்னேஷ் சிவன் பாராட்டி உள்ளார்.
மெர்ரி கிறிஸ்துமஸ் படம் ஒரு த்ரில்லர் படம். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ஒரு தீவிரவாதியாக நடித்துள்ளார். கத்ரீனா கைப் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படம் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
