Wednesday, October 28, 2026

நாளுக்கு நாள் எகிறும் வசூல் அயலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்தின் மூலமே பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கியிருக்கும் அயலான் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று முன் தினம் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள்,சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனுக்கான வியாபாரம் பெருகியது.

ADVERTISEMENT

இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் வெளியானது. தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷுக்கு போட்டியாக இந்த பொங்கல் பண்டிகையில் களத்தில் குதித்தார் சிவகார்த்திகேயன். எனவே இந்த பொங்கல் ரேஸில் யார் வெல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருந்தது.

ஏலியன் ஜானரில் படம் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக குழந்தைகளை கவர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எஸ்கே ரசிகர்களிடையே இருந்தது. அந்த ஆவலோடு படத்துக்கு சென்ற ரசிகர்கள் படத்துக்கு டீசண்ட்டான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். அதிலும் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெய் சிலிர்க்க வைப்பதாகவும்; கதை சாதாரண கதைதான் என்றாலும் ஏலியனையும், தன்னுடைய ஸ்க்ரீன் பிளேவையும் வைத்து ரவிக்குமார் காப்பாற்றிவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறினர்.

இரண்டாவது நாள் வசூல்

இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த நிலவரம் தெரியவந்திருக்கிறது. அதன்படி படமானது இரண்டாவது நாளில் 4.51 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக படம் வெளியான முதல் நாளில் 5 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் நாளை ஒப்பிடுகையில் இரண்டாவது நாள் வசூல் கொஞ்சம் டல்லடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் இரண்டு நாட்களில் படம் 10 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது.

குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் வெற்றி

இந்த படம் குடும்ப ரசிகர்களால் கொண்டாடப்படும் வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலியன் கதாபாத்திரம் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கியுள்ளன. சிவகார்த்திகேயனின் நடிப்பு, ரகுல் ப்ரீத் சிங்கின் அழகு படத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்துள்ளது.

இந்த படம் பொங்கல் பண்டிகை ரேஸில் வெற்றிபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT