Wednesday, October 28, 2026

ரஜினியின் லால் சலாம் படத்திற்கு வந்த புதிய சோதனை ! உச்ச கட்ட கவலையில் ரஜினி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கடந்த ஜனவரி 12ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. அந்தக் க்ளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படவிருந்த லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென தள்ளிப்போனது. படத்தின் சில பணிகள் மிச்சம் இருந்ததால்தான் ரிலீஸ் தள்ளிப்போனதாக பரவலாக பேசப்பட்டது. இந்த சூழலில் படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு வேறு காரணம் ஒன்றும் கூறப்படுகிறது. அதாவது, லால் சலாம் படத்தின் டிஜிட்டல் உரிமையை எந்த நிறுவனமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் ரிலீஸ் தள்ளிப்போனதாம்.

இதனை கவனித்த ரஜினிகாந்த் தனது மகளுக்காக சன் டிவி நிறுவனத்திடம் நேரடியாக ஃபோன் செய்து லால் சலாம் படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாராம். சன் டிவியும் அதற்கு ஒத்துக்கொண்டதாம்.

இதனால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்விட்டதாக திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். மும்பையில் அவர் தாதாவாக இருப்பார் என்றும் விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் ஒரு பிரச்னையில் இருந்து அவர் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் எப்போதும் எல்லாம் சரியாக அமையும் என சொல்ல முடியாது. சில சமயம் சில விஷயங்களுக்காக மற்றவர்களின் உதவிகளை பெற வேண்டிய நிலை ஏற்படும். அப்படி சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உதவிய சம்பவம் பற்றிதான் இங்கே பார்க்கப்போகிறோம்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் ரஜினி ஒரு கெஸ்ட்ரோலில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ரஜினி நடித்தால் அது ரஜினி படமாக மாறிவிடும் என கணக்குப்போட்டுதான் இதை செய்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த படம் கிரிக்கெட்டையும், விளையாட்டில் மதமும், அரசியலும் எப்படி நுழைந்து விளையாடுகிறது என்பதையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர்.

இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக சொல்லப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட 4 படங்கள் வெளியானதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஒருபக்கம், இபபடத்தின் காட்சிகள் திருடு போய்விட்டதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமை ஆகியவை விற்பனை ஆகவில்லை. அதனால் இந்த படம் போனி ஆகவில்லை.. அதனால்தான் இந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை என விபரம் தெரிந்தவர்கள் சொன்னார்கள். இதைப்பார்த்து அப்செட் ஆன ரஜினி சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறனை அழைத்து ‘இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்’ என கோரிக்கை வைக்க அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்தே இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இப்போது டிஜிட்டல் உரிமை விற்கப்படாமல் இருக்கிறது. அமேசான் அல்லது நெட்பிளிக்ஸ் என எதாவது ஒரு நிறுவனம் லால் சலாம் படத்தை வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கலாநிதி மாறன் உதவியது ஏன்?

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நபர். அவரது படங்கள் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது. லால் சலாம் படமும் ரஜினி நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், படத்தின் தொலைக்காட்சி உரிமை விற்பனை ஆகவில்லை என்றால் அந்த படத்தின் லாபம் பாதிக்கப்படும். இதைப் பார்த்து ரஜினி அப்செட் ஆனார். அப்போதுதான் அவர் கலாநிதி மாறனை அணுகினார்.

கலாநிதி மாறன் ஒரு பெரிய தொழில் அதிபர். அவருக்கு தமிழ் சினிமா மீது அதிக அன்பு உள்ளது. அவர் தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறார். லால் சலாம் படம் ஒரு நல்ல படம் என்பதால் அதை வெளியிட கலாநிதி மாறன் முன்வந்தார்.

கலாநிதி மாறனின் இந்த உதவி ரஜினிகாந்துக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்தார்.

லால் சலாம் படத்தின் எதிர்பார்ப்பு

லால் சலாம் படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT