தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் தனது திருமணம் குறித்த அறிவிப்பை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் 2019 ஆம் ஆண்டு வெளியான “சித்திரை செவ்வானம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் சமுத்திரகனி நாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்குப் பிறகு பூஜா கண்ணன் பெரிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில், தனது காதலர் மற்றும் வருங்கால வாழ்க்கைத் துணை வினீத்தை அறிமுகப்படுத்தி பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்த க்யூட்டான சிறிய பட்டன் வாழ்க்கையில் தன்னலமற்று எப்படி காதலிப்பது, காதலில் எப்படி திளைத்திருப்பது என எனக்கு கற்றுத் தந்துள்ளது. இவர் தான் வினீத். என் க்ரைம் பார்ட்னர்.. இப்போது என் வாழ்க்கை பார்ட்னரும் கூட” என உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார். மேலும் தங்கள் காதல் தருணங்களின் அழகான வீடியோ தொகுப்பினையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
பூஜா கண்ணனின் திருமணம் குறித்த தேதி மற்றும் நேரம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த அறிவிப்பை பூஜாவின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்வுடன் வரவேற்றுள்ளனர். பலரும் பூஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பூஜா கண்ணனின் திருமணம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
