Wednesday, October 28, 2026

சந்திரமுகி 2 படப்பிடிப்பில் என்னை தனியாக அழைத்து இயக்குனர் செய்த காரியம் ! உண்மை உடைத்த லட்சுமிமேனன்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் லட்சுமிமேனன். இவர் துணை நடிகையாக அறிமுகமாகி, கும்கி திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து, சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

சந்திரமுகி 2 திரைப்படத்தின் சூட்டிங் போது நடந்த சில சம்பவங்களை லட்சுமிமேனன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பேட்டியில், “சந்திரமுகி 2 திரைப்படத்தில் சில காட்சிகளை நான் சரியாக நடிக்கவில்லை. அதனால், இயக்குனர் பி வாசு என்னை பொது இடத்தில் திட்டிவிட்டார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. மனநிலை சரியாக இல்லை.

ADVERTISEMENT

பிறகு, நான் பி வாசு அவர்களிடம் நேரடியாக சென்று, “நான் சரியாக நடிக்கவில்லை என்றால் என்னை தயவு செய்து தனியாக அழைத்து சென்று திட்டுங்கள். எல்லாரும் முன்னாடியும் திட்டாதீர்கள்” என்று கூறினேன்.

அப்போது, “நீங்கள் சரியாக நடிக்கவில்லை என்றால், என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதுதான் நான் திட்டிவிட்டேன்” என்று பி வாசு கூறினார்.

அதன் பிறகு, எந்த பிரச்சினையாக இருந்தாலும் இயக்குனர் என்னை தனியாக அழைத்து அந்த காட்சியை தெளிவாக விளக்கிக் கூறுவார். எப்படி நடிக்கணும், எப்படி நடிக்க கூடாது என்பதையும் விரிவாக விளக்கி சொல்லிக் கொடுப்பார். அவ்வளவு பொறுப்பான இயக்குனர் பி வாசு” என்று லட்சுமிமேனன் கூறினார்.

இந்த பேட்டியின் மூலம், இயக்குனர் பி வாசு ஒரு சிறந்த இயக்குனராகவும், பொறுப்பான ஆசிரியராகவும் இருப்பதை லட்சுமிமேனன் வெளிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT