Wednesday, October 28, 2026

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் நிலையில், ஶ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி ஜனவரி 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா

ADVERTISEMENT

அயோத்தியில் ஜனவரி 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இத்திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பல சர்ச்சைகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படாமலேயே திறக்க சங்கராச்சாரியார்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவே ஒரு அரசியல் நிகழ்வுதான் என விமர்சித்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக இந்நிகழ்வை புறக்கணித்துள்ளன.

பிரதமரின் தமிழ்நாடு வருகை

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகை தருகிறார் பிரதமர் மோடி.

ஜனவரி 19-ந் தேதி

ஜனவரி 19-ந் தேதி கேலோ விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் திருச்சி வரும் பிரதமர், சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று அரங்கநாத சுவாமியை தரிசனம் செய்கிறார்.

ஜனவரி 20-ந் தேதி

ஜனவரி 20-ந் தேதி திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

ஜனவரி 21-ந் தேதி

ஜனவரி 21-ந் தேதி திருச்சியிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஆளுநர் ரவி ஆலோசனை

பிரதமரின் வருகையையொட்டி அவரது சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், மற்றும் திருச்சி காவல்துறை உயரதிகாரிகள் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று திருச்சி வருகை தந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வரவேற்றார். பின்னர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற ஆளுநர் ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்துக்கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வருகை குறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ரவி ஆலோசனை செய்தார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT