தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தனது திறமை மற்றும் கடின உழைப்பால் ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளார். அவர் ஒரு மாஸ் நடிகராக ஆக்ஷன் ஹீரோவாக திகழ்கிறார்.
சமீபகாலமாக, விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. அவர் துபாயில் இருந்து கொண்டு விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், அஜித்தை பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவலை இயக்குனர் சரண் கூறினார். அமர்க்களம் படத்தில் நடிப்பதற்காக அதன் தயாரிப்பாளர் அட்வான்ஸ் தொகையாக அஜித்திடம் செக் ஒன்றை கொடுத்தாராம். ஆனால் அஜித் அந்த செக்கை இதுவரை வங்கியில் கொடுத்து பணத்தை எடுக்கவில்லையாம்.
அதற்கு காரணம், காதல் மன்னன் சரண்க்கு பெரிய அடியாக அமைந்த படம். அதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஆனதாம். அதனால் அந்த நஷ்டத்தை ஈடுகட்டவே அந்த செக்கிலிருந்து பணத்தை அவர் இன்று வரை எடுக்கவில்லையாம்.
அமர்க்களம் படம் இரட்டை லாபம் பெற்றுக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அஜித்தின் நல்ல குணத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு நல்ல நண்பராக, ஒரு நல்ல மனிதராக அஜித் இருப்பதை இந்த தகவல் காட்டுகிறது.
அஜித்தின் இந்த செயல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அஜித்தை பற்றிய நல்ல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
