தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிமுடிந்த பிறகு நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. இந்நிலையில், 105 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த உரிமையை கைப்பற்றியுள்ளது. இது ஓடிடி உரிமைக்கான மிக உயர்ந்த தொகை ஆகும்.
விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளமே கிட்டத்தட்ட 105 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகையை நெட்பிளிக்ஸ் வாங்கியதால் லைக்காவின் பாரம் குறைந்துள்ளது. மேலும், இந்த உரிமையை வாங்கியதன் மூலம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விடாமுயற்சி படம் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் ‘விடாமுயற்ச்சி’ ஒரு சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் என்றும், முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரும் பெண் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார், இப்படத்தில் அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்படவில்லை, அதே நேரத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது.
