தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு “விடாமுயற்சி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி, தற்போது இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்டன.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. திரையரங்கில் படம் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெட்ஃப்ளிக்ஸ் என்பது உலகின் மிகப்பெரிய ஓடிடி தளமாகும். அதில் விடாமுயற்சி படம் வெளியாகும் என்பதால், படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு சென்றடைவதற்கு வாய்ப்புள்ளது.
விடாமுயற்சி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் விடாமுயற்சி படத்தின் அனைத்து பாடல்களையும் முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, அதனால் மொத்தம் விடாமுயற்சி திரைப்படத்தில் நான்கு பாடல்களும் 2 தீம் மியூசிக்களும் இடம் பெற்றுள்ளன என கூறுகிறார்கள், அதிலும் அஜித்திற்கு ஒரு காதல் பாடல், அஜீததின் அறிமுக பாடல் கொண்டாட்டமான பாடல், ஒரு மெலடி பாடல் என ஒவ்வொன்றும் தனித்தனியாக ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த விடாமுயற்சி படத்தின் மெயின் தீம் மியூசிக் இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் உருவாகிய விவேகம் வேதாளம் படத்தின் தீம் மியூசிக் போன்று மரண மாசாக வந்துள்ளதாகவும் கண்டிப்பாக இந்த தீம் மியூசிக் மிகப் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என்றும் தீம் மியூசிக் உடன் தலையை திரையில் பார்த்தால் திரையரங்கமே அதிறும் எனவும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடி உள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, பொதுவாக அனிருத் இசையமைக்கும் படங்களில் யாராவது ஒரு நடிகரை பாட வைத்து விடுவார் அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார், இதைப்பற்றி விடாமுயற்சி குழுவினரிடம் கேட்டபொழுது உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் இந்த தகவலை பிரபல முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது ஒருவேளை நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் பாடலைப் பாடி இருந்தால் அந்தப் பாடல் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, மட்டுமில்லாமல் அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு பக்காவான ட்ரீட்டாக அமையும் என தெரிகிறது.
