Wednesday, October 28, 2026

GOAT படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை மிரள வைத்த பிரசாந்த் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் பிரசாந்த், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (GOAT) படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, யோகி பாபு, ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்தப் பாடல், பார்ட்டி மோடியில் அமைந்துள்ளது. இந்தப் பாடலில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ADVERTISEMENT

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஷூட்டிங்கின்போது, விஜய்யும் பிரபுதேவாவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் செம்ம டஃப் கொடுத்து ஆடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரசாந்தும் இணைய, விஜய், பிரபுதேவாவுக்கு இணையாக ஆடி படப்பிடிப்புத் தளத்தையே மொத்தமாக மிரள வைத்துவிட்டாராம்.

விஜய் சினிமாவில் அறிமுகமான போது உச்சத்தில் இருந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். நடிப்பு மட்டுமில்லாமல் டான்ஸ், ஜிம்னாஸ்டிக் என பல வித்தைகளை கற்றுக்கொண்டு தான் சினிமாவில் நடிக்கவே ஆரம்பித்தார். இப்போது சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும் டான்ஸ் உட்பட அத்தனை வித்தைகளிலும் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக மெர்சல் காட்டி வருகிறாராம்.

GOAT படம் வெளியான பின்னர் பிரசாந்தின் மார்க்கெட் வேல்யூ மீண்டும் உச்சம் தொடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT