Wednesday, October 28, 2026

ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படத்தின் ரீலிஸ் தேதி இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “சைரன்” திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஜெயம் ரவி, அதன் பின்னர் இறைவன் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சைரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சைரன் திரைப்படம் வெற்றிபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT