Wednesday, October 28, 2026

இணையத்தில் வைரலாகும் லெஜண்ட் சரவணன் லேட்டஸ்ட் புகைப்படம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கடந்த ஆண்டு தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் ஆக்‌ஷன் படத்தை இயக்குகிறார் துரை செந்தில்குமார்.

தி லெஜண்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு, லெஜண்ட் சரவணன் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த படம் எப்போது? எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தன. இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

காஷ்மீரில் லொகேஷன் பார்வையிட்டு வரும் லெஜண்ட் சரவணன், தனது புதிய லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தாடி, மீசை என முதல் படத்துக்கும் இந்த படத்துக்கும் ஆளே வித்தியாசமாக மாறி காட்சியளிக்கிறார்.

இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, தனுஷின் கொடி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரி, சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் கருடன் படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் மார்ச் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT