சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை என்பது காலங்காலமாக இருந்துவரும் ஒரு பிரச்னை. திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால், இன்னும் அந்த பிரச்னை முழுமையாக தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில், அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னைக்கு அதிரடி பதில் அளித்துள்ளார் நடிகை பாப்ரி கோஷ். டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டியில் பேசிய பாப்ரி கோஷ், “என்னிடம் வந்து யாராவது ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பட வாய்ப்பு தர முடியும் என்று சொன்னால் நான் முடியாது என்று சொல்லமாட்டேன்.
அந்த நபரின் வீட்டுக்கு நேராக செல்வேன். சென்ற பிறகு அவரது குடும்பத்தார் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு முன்பே வைத்து அந்த நபருக்கு நான் முத்தம் கொடுப்பேன். அதை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் ஏன் இப்படி செய்த என்று கேட்பார்கள். அப்போது, ‘உனக்கு பட வாய்ப்பு தருகிறேன். அட்ஜஸ்ட்மென்ட் செய் அவர் சொன்னார். அதனால்தான் முத்தம் கொடுத்தேன் என்று சொல்வேன். பிறகு அந்த நபரை அவரது குடும்பத்தினரே நன்றாக கவனித்துக்கொள்வார்கள்” என்று கூறினார்.
பாப்ரி கோஷின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது தைரியமான பேச்சுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னைக்கு பாப்ரி கோஷின் இந்த பதில் ஒரு அதிர்ச்சியளிக்கும் பதில் என்று கூறலாம். இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு இது ஒரு சிறந்த வழி என்று பலரும் கருதுகின்றனர்.
