Wednesday, October 28, 2026

கடந்த பத்து வருடமாக அவருடன் டேட்டிங் இருந்தேன் டாப்ஸி கூறிய உண்மை !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் காஞ்சனா 2, ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பண்ணு. இவர் தற்போது தமிழில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை டாப்ஸி, தான் டேட்டிங் செய்து வரும் நபர் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

“நான் சினிமாவிற்கு நுழைந்த ஆரம்ப காலத்தில் இருந்தே ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறேன். அவருடைய பெயர் மதிஸ். நாங்கள் பழகிய நாளில் இருந்து இப்போது வரை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவருடன் பழக்கம் ஏற்பட்ட தினத்தில் இருந்து இப்போதுவரை என்னுடைய மனதை தொட்டு சொல்கிறேன் அவரை விட்டு விட்டு வேறொருவருடன் உறவில் ஈடுபடவேண்டும் என்று நான் நினைத்தது கூட இல்லை. அந்த அளவிற்கு எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட நானும் அவரும் ஒரு 10 வருடங்களாகவே டேட்டிங் செய்து வருகிறோம்” என்று கூறினார்.

மேலும், “தனிப்பட்ட முறையில் காதல் மற்றும் திருமணம் பற்றிய கருத்துக்கள் இருக்கிறது. எனவே, நான் இது நாள் வரை அதுக்காக தான் திருமணம் பற்றியோ காதல் பற்றியோ பேசியது இல்லை. இருந்தாலும் நான் டேட்டிங் செய்யும் நபருடன் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

டாப்ஸி பண்ணு தனது 10 வருட காதலனைப் பற்றிய இந்த தகவலை பகிர்ந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அமைய வாழ்த்துக்கள்!

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT