Wednesday, October 28, 2026

ச்சே என்ன மனுஷன்யா அஜித் ! அஜித்தை வியந்து பேசிய விடாமுயற்சி தயாரிப்பாளர் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கோலிவுட்டின் முன்னணி நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கும் போதில் இருந்தே ஏகப்பட்ட குளறுபடிகளை சந்தித்து வருகிறது.

முதலில் விக்னேஷ் சிவனை வைத்து படத்தை அறிவித்த லைக்கா, பின்னர் இயக்குனரை மாற்றியது. அதன்பிறகு, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா படத்திலிருந்து நீக்கப்பட்டு, ஓம் பிரகாஷ் இந்தப் படத்தில் நுழைந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், அஜர்பைஜானில் நடந்து வரும் படப்பிடிப்பு பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. அங்கு உள்ள கடுங்குளிர் காரணமாக, படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை.

அதோடு, சென்னையில் இருந்து ஏதாவது ஒரு கேமிராவை அஜர்பைஜானுக்கு கொண்டு செல்ல மூன்று நாட்கள் ஆகும் என்பதால், அங்குயே வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள விலைவாசிக்கு ஏகப்பட்ட பொருட்செலவு ஆகி வருகிறது.

ஒரு நாள் படப்பிடிப்பிற்கான செலவு 50 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிகிறது. இப்படியே இருந்தால், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் நிலைமை என்னவாகும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

படப்பிடிப்பு நடக்காத நாட்களிலும் அதற்கான செலவுகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த சவால்களுக்கு மத்தியில், விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 110 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனால், லைக்கா நிறுவனம் சந்தோஷமாக உள்ளது.

இந்த படம் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT