கோலிவுட்டின் மாஸ் ஹீரோ விஜய்க்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் படங்கள் கேரளாவில் மலையாள முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே இல்லாத ஓபனிங் பெறுகின்றன.
தற்போது விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார். GOAT படப்பிடிப்பில் விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்தபோது, விஜய் தனது ஃபேவரைட் ஹீரோ யார் என்று ஜெயராமிடம் கூறியுள்ளார்.
விஜய் மலையாள படங்களை அதிகம் பார்ப்பதாகவும், குறிப்பாக மம்முட்டியின் தீவிர ரசிகர் என்றும், அவர் நடித்த படங்கள் அனைத்தையும் மிஸ் செய்துவிடாமல் பார்த்து வருவதாகவும் ஜெயராம் கூறியுள்ளார்.
“விஜய்க்கு மம்முட்டியை தான் இவ்வளவு பிடிக்கும் என்பதே எனக்கு தெரியாது. இதுவரை இந்த விஷயத்தை நான் மம்முட்டியிடமும் சொன்னது கிடையாது” என்று ஜெயராம் கூறியுள்ளார்.
மம்முட்டி நடித்த காதல் படம் ஒன்றை பார்த்துவிட்டு, மம்முட்டியின் நடிப்பை பாராட்டியுள்ளார் விஜய் என்றும் ஜெயராம் கூறியுள்ளார்.
ஜெயராமின் இந்த பேச்சு தற்போது மல்லுவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
