Wednesday, October 28, 2026

அடேங்கப்பா மரண காட்டுனா இதுதான் அஜித் எடுத்த அதிரடி முடிவு ! மிரளும் திரையுலகம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விடாமுயற்சி படத்தை முடித்ததும் அஜித் அடுத்தடுத்து பிரசாந்த் நீல், ஆதிக் ரவிச்சந்திரன் படங்களில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் அஜித்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்தமான படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து, அஜித் ஏகே 63 படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தக் கூட்டணி குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் ஏதும் வெளியாகவில்லை. அதேநேரம், அஜித்தின் ஏகே 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2, சலார் படங்கள் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் இயக்கும் படங்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாக, கேங்ஸ்டர் பின்னணியில் செம்ம மாஸ்ஸான ஆக்‌ஷன் படங்கள் எடுப்பதில் கில்லாடி இந்த பிரசாந்த் நீல்.

இந்தப் படம் முடிந்ததும் அங்கிருந்து நேராக கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டாராம் பிரசாந்த் நீல். அதன்படி தான் அஜித்தின் ஏகே 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

அதனடிப்படையில் தற்போது அஜித் – பிரசாந்த் நீல் இணையும் ஏகே 65 படத்துக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்து முடிந்துள்ளதாம். அதில், ஏகே 65 படத்தின் கதை, மேக்கிங் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அஜித்திடம் இருந்து பிரசாந்த் நீலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படத்தையும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கலாம் என தெரிகிறது.

அஜித் – வெற்றிமாறன் கூட்டணி இணைவது இன்னும் உறுதியாகவில்லை. இதனால் NTR 31, கேஜிஎஃப் 3, சலார் 2 படங்களை முடித்ததும் அஜித்துடன் பிரசாந்த் நீல் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் NTR 31 முடிந்ததும் இக்கூட்டணி இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை அஜித் – பிரசாந்த் நீல் இணைந்தால் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை ஏகே 65 பிரேக் செய்யும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விவரங்கள்:

அஜித்தின் ஏகே 65 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படம் NTR 31, கேஜிஎஃப் 3, சலார் 2 படங்களை முடித்ததும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கலாம் என தெரிகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு:

அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி உருவாகும் என்ற தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தக் கூட்டணி கோலிவுட்டில் புதிய வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT