Wednesday, October 28, 2026

ஒட்டு மொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ரீலிஸ் தேதி இதோ !!அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித்தின் 62வது படமான “விடாமுயற்சி” படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு ஸ்பாட்டில் இருந்து ஸ்பெஷல் அப்டேட்ஸ் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

அஜித்தின் காட்சிகள் முடிவடைகிறது

விடாமுயற்சி படப்பிடிப்பு கடந்தாண்டு இறுதியில் தொடங்கியது. இதுவரை இரண்டு ஷெட்யூல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 24ம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இதனால் விடாமுயற்சி படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜானில் ஆஜராகிவிட்டனர். ஜனவரி 24ல் தொடங்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே அஜித்தின் காட்சிகளை பாதிக்கும் மேல் ஷூட் செய்துவிட்டாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. அதுபோக மிச்சமிருக்கும் அஜித்தின் மொத்த போர்ஷனையும் பிப்ரவரி இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் என பிளான் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அஜித் படப்பிடிப்பில் இருந்து வெளியேறுகிறார்

விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து 3 முறை தான் பிரேக் எடுத்துள்ளார் அஜித். அதனால் அவரது காட்சிகளை பெரும்பாலும் முடித்துவிட்டார் இயக்குனர் மகிழ் திருமேனி.

அதேபோல், அஜித் – அர்ஜுன், அஜித் – த்ரிஷா என இந்த காம்போவில் வரும் காட்சிகளும் ஓரளவு முடிந்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து முதல் ஆளாக அஜித் தான் வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏகே 63 படப்பிடிப்புக்கு தயாராகும் அஜித்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ஏகே 63 படத்தில் கமிட்டாகியுள்ளார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க ஆதிக் ரவிச்சந்திரன் ரெடியாகிவிட்டாராம்.

அதனால் தான் விடாமுயற்சியில் அஜித்தின் பகுதியை மட்டும் அவசரமாக எடுத்து வருகிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. அதன்பின்னர் மற்ற போர்ஷனை ஷூட் செய்துவிட்டு, ஒரே மாதத்தில் எடிட்டிங் உட்பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முடிக்கவுள்ளாராம்.

அப்போது தான் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. மே மாதம் கோடை விடுமுறையும் தொடங்கிவிடும் என்பதால், சம்மர் ஸ்பெஷலாக விடாமுயற்சியை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபார்ஸ்ட் லுக், டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று, பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ரீலிஸ் தேதி ஏப்ரல் 26 ஆம் தேதி படம் ரீலிஸ் ஆகும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது .

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT