நடிகர் அஜித்தின் 62-வது படமான “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். வில்லனாக அர்ஜுன் மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இப்படத்தின் ஆன்போர்ட் அறிவிப்பை கூட லைகா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், மார்ச் மாதத்துக்குள் படத்தின் ஷூட்டிங்கை முடிக்க மகிழ் திருமேனி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவாகும் படமாக விடாமுயற்சி இருக்கும் நிலையில், பான் இந்தியா ரிலீஸ் பிளானையும் லைகா நிறுவனம் வைத்துள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி அல்லது மே 1ம் தேதி இரு தேதிகளையும் ரிலீஸ் தேதியாக லாக் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


ஷூட்டிங் முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு புரமோஷன் பணிகளை ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஷூட்டிங் முடிய முடிய நடைபெற்று வருகிறது.


இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் அஜித் வேர்ல்ட் டூர் போகாமல் ஏகே 63 படத்தையும் முடித்து விட்டு வேர்ல்ட் டூர் போகலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் 3 மாதத்தில் படத்தை முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அஜித் ரசிகர்கள் இந்த தகவல்களை கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
