கடந்த டிசம்பர் மாத இறுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் இறுதிச் சடங்கு, நினைவேந்தல் என எதற்குமே நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவில்லை. இந்த நிலையில், நடிகர் அஜித் பற்றி தவறாக பேச வேண்டாம் என நடிகர் மீசை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டியில், “விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வீடியோ மெசேஜில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அஜித் பற்றி தவறாக பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேடையில் பேசிய விஜய பிரபாகரனும், அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என்றும், வராதவர்கள் மீது எந்த ஒரு கோபமும் இல்லை என்றும் கூறினார்.
அஜித் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இருக்கிறார். சினிமாக்காரர்களுக்கு காம்பினேஷன் ஷாட் இருக்கும், அனைத்து நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிக்க வேண்டிய சூழல் இருக்கும், குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். இது போன்ற பல காரணங்களால் நேரில் அஞ்சலி செலுத்த வர முடியாதவரை யாரும் குறை சொல்லக்கூடாது. விஜயகாந்தின் குடும்பத்தினரே இதனை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளனர்.
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் விஜயகாந்த் மீது அளவற்ற பாசம் கொண்டவர்கள். நினைவேந்தல் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விஜயகாந்த் பற்றி பேசியதெல்லாம் சிறப்பான விஷயம்” என்று கூறினார்.
மீசை ராஜேந்திரனின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்த் மீது அளவற்ற பாசம் கொண்ட அஜித், சூழ்நிலை காரணமாக நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது உண்மை.
