தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் மார்ச் மாதத்தில் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே63 படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது, அஜித் தன்னுடைய பார்வையை மாற்றியமைக்க அறிவுறுத்தியதாகவும், அதுவே தன்னை மார்க் ஆண்டனி போன்ற படத்தை இயக்க உத்வேகப்படுத்தியதாகவும் ஆதிக் தெரிவித்துள்ளார்.


தற்போது ஆதிக் ஏகே63 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் காமெடி, ஆக்ஷன் என இரண்டுமே கலந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே63 படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.


இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, அஜித்துடனான படம் அவரது கேரியரில் பெஸ்ட்டான தருணங்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


விடாமுயற்சி படத்தின் தற்போதைய நிலை


விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் ஏறக்குறைய அசர்பைஜானிலேயே எடுத்து முடிக்க இயக்குநர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார்.


முன்னதாக அசர்பைஜானின் பல இடங்களில் ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்ததாக சிறிய அளவில் செட்கள் அமைத்து அஜித், திரிஷா காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


படத்தின் சூட்டிங்கை வரும் பிப்ரவரி 3ம் வாரத்திற்குள் எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் கோடை கொண்டாட்டமாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் அஜித் 63 படத்தின் ஹீரோயின் ஆக கேஜி எப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது .
