Wednesday, October 28, 2026

அனல் பறக்கும் அஜித்தின் மாஸ் லுக்.! அசரவைக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய லுக் வைரல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்திற்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் உள்ளனர். அவர் பைக்கை எடுத்துகொண்டு உலகில் எங்கு சென்றாலும், அவரைப் பார்க்கவும், அவருடன் பேசவும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

ADVERTISEMENT

தற்போது அஜித் தனது 62வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைசான் நாட்டில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

விடாமுயற்சி படத்திற்காக அஜித் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் பல கிலோ குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த லுக்கில் பார்ப்பதற்கு அஜித் அழகாக இருக்கிறார். அஜர்பைசான் நாட்டில் இப்போது படக்குழு இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜாலியாக அந்த ஊரை சுற்றி வருகிறார் அஜித்.

அப்போது அஜர்பைசான் நாட்டை சேர்ந்த சிலரும் அஜித்தை அடையாளம் கண்டு கொண்டு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற அஜித்தை அங்கிருந்த சில ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விடாமுயற்சி படத்திற்கு பிப்ரவரி மாதம் இறுதிவரை கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித். எனவே, அப்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, எப்ரல் 14 அல்லது அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படம் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அஜர்பைசானில் ரசிகர்கள் சிலருடன் அஜித் எடுத்துகொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் அஜித் ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருப்பது, அவரது எளிமையான குணத்தை காட்டுகிறது.

அஜித்தின் நடிப்பு மற்றும் திறமைக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அஜித்தின் இந்த வெற்றிகள் தொடர்ந்து நீடிக்க வாழ்த்துகள்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT