வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் மீனாக்ஷி செளத்ரி தான் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திலும் ஹீரோயின். இந்நிலையில், தொடர்ந்து வித்தியாசமாக படத்துக்கு புரமோஷன் செய்து வரும் ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் நடத்திய புரமோஷனின் போது விஜய் படத்தை கலாய்த்ததாக அஜித் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு காரணம் ஆர்ஜே பாலாஜி பேசிய ஒரு வசனம் தான். “குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம்னு நான் சொல்லவே இல்லையே” என்று ஆர்ஜே பாலாஜி சொல்ல, அதற்கு பதிலளிக்கும் விதமாக விஜே சித்து “அண்ணா குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி” என்று சொல்ல, அதற்கு ஆர்ஜே பாலாஜி “அப்படி சொல்லவே பயமா இருக்குடா, இப்போ எல்லாம் சுமாரா ஓடுற படத்துக்குத் தான் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என போடுறாங்க” என்று ட்ரோல் செய்தார்.
இந்த வீடியோவை வாரிசு படத்தில் விஜய் “குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி” என சொல்லும் வசன காட்சியுடன் எடிட் செய்து அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக உங்க ஆளு அஜித் நடித்த வலிமை படத்தை தான் சொல்றாரு என்று கூறி சண்டையை ஆரம்பித்து விட்டனர்.
இந்த சர்ச்சை குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “ஆர்ஜே பாலாஜி ஒரு நகைச்சுவை நடிகர், அவர் சிரிப்பை வரவழைக்கவே பேசுகிறார். அவரது வசனங்களை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் ரசிக்க வேண்டும்”, “அஜித் ரசிகர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், அவர்கள் ஆர்ஜே பாலாஜியின் வசனத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம்”, “இந்த சர்ச்சை எல்லாம் ரசிகர்களின் வெறுப்பு அரசியலால் தான் ஏற்படுகிறது” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Varisu attacked 😂 pic.twitter.com/LXGCu1b8eL
— Trollywood 𝕏 (@TrollywoodX) January 22, 2024
