Wednesday, October 28, 2026

கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் ஹீரோ 🔥🔥🔥தல சேஞ்ச் ஓவர் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த இரு மாதங்களாக அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் -அர்ஜூன் இடையிலான சில ஆக்ஷன் காட்சிகளையும் கார் சேஸிங் காட்சிகளையும் படத்தின் இயக்குர் மகிழ் திருமேனி எடுத்து முடித்துள்ளார்.

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சில தினங்கள் பிரேக் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த 12ம் தேதி படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டது. இருந்தபோதிலும் படத்தின் சூட்டிங் இன்னும் துவங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சூட்டிங் தள்ளிப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, அடுத்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஏகே 63 படத்தின் சூட்டிங்கில் இணைய அஜித் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை பிப்ரவரிக்குள் நிறைவு செய்ய மகிழ் திருமேனிக்கு அஜித் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் இணைந்து அதிகமான புகைப்படங்களை எடுத்து வருகிறார். அடுத்தடுத்து அஜித்தின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

ஷாலினி வெளியிட்ட அஜித்தின் புதிய புகைப்படம்

இந்நிலையில், அஜித்தின் ரீசண்ட் கிளிக்கை அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் கூலர்சுடன் அஜித் மாஸாக காணப்படுகிறார். அவரது சமீபத்திய உடை தேர்வு குறித்தும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT