Wednesday, October 28, 2026

இது வேற மாறி அப்டேட்..! அஜித் 63 படத்தில் வில்லன் யாருன்னு பாருங்க..! – எகிறிய எதிர்பார்ப்பு..!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அஜித் நடிக்கவுள்ள அவரது 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக பாலிவுட்டில் இருந்து தபு நடிக்கவுள்ளார்.

அஜித்தின் ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை குறுகிய காலத்தில் முடித்துவிட படக்குழு பிளான் செய்துள்ளதாம். அதுமட்டுமல்லாமல் 2025 பொங்கலுக்கு ஏகே 63 படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துவிட்டார்களாம்.

ADVERTISEMENT

ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித், தபு ஜோடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருந்தது. தற்போது அதே காம்போவில் ஏகே 63 படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். அஜித்தின் படம் என்பதால் தபுவும் உடனடியாக கால்ஷீட் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அஜித் பெரும்பாலும் தனது வயதுக்கு ஏற்ற மாதிரி சீனியர் நடிகைகளுடன் மட்டுமே ஜோடி சேருவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்தப் புதிய காம்போ ரசிகர்களிடம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அந்த வகையில், தற்போது இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடித்த இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றிருக்கின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT