Wednesday, October 28, 2026

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஆன்மிக நிகழ்வாகவே பார்க்கிறேன் – ரஜினிகாந்த்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

விழாவை முடித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ராமர் கோயில் திறந்த பின்னர் அதை பார்த்த முதல் 150 பேர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வு” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

ராமர் கோயில் கும்பாபிஷேகம் மத அரசியல் நிகழ்வா என்ற கேள்விக்கு, “ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் கருத்து அவர்களின் சொந்த கருத்து. நான் இதை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்” என்று கூறினார்.

ராஜினிகாந்தின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. சிலர் அவரது கருத்தை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT