தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் எளிமையை ஒருமுறை தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி நேரில் கண்டு வியந்துள்ளார்.
ஒரு முறை ராஜமௌலி தனது குடும்பத்துடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவர் பார்க்கும் தூரத்தில் அஜித் அமர்ந்திருந்தார். அஜித்திற்கு ராஜமௌலியை பார்த்தவுடன் அவருக்கு தெரிந்துவிட்டது இவர் பாகுபலி பட இயக்குனர்தான் என்று. உடனே அங்கு சென்று ராஜமௌலியை நெருங்கி சென்று, “சார், நான்தான் அஜித். தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கிறேன்” என்று அறிமுகம் கொடுத்தார்.
ராஜமௌலிக்கு ஏற்கனவே அஜித்தை தெரியும் என்றாலும், அவர் பேசுவாரா என்ற சந்தேகத்தில் அவர் அஜித்தை பார்த்தும் பார்க்காதது போல இருந்தார். இருந்தும் அஜித்தே வந்து பேசவும், அவருக்கு கை கொடுத்து பேசினார் ராஜமௌலி.
பிறகு குடும்பத்துடன் ராஜமௌலி வந்து இருக்கிறார் என்பதை அறிந்து மீண்டும் போய் தனது மேஜையில் அமர்ந்து கொண்டார் அஜித். அதன் பிறகு ராஜமௌலியின் மனைவி வந்தவுடன் அங்கிருந்து சைகை மூலம் உங்களது மனைவியா என்று கேட்டார் அஜித். ஆமாம் என்று ராஜமௌலி கூறவும், திரும்பவும் எழுந்து வந்து அவருக்கும் கை கொடுத்து தன்னை அறிமுகம் செய்தார் அஜித்.
இந்த நிகழ்வு குறித்து பேட்டியில் கூறிய ராஜமௌலி, “தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு மனிதர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று நான் ஆச்சரியப்பட்டு போய் விட்டேன்” என்று கூறினார்.
இந்த சம்பவம் அஜித்தின் எளிமையையும், மற்றவர்களிடம் மரியாதை காட்டும் பண்பையும் வெளிப்படுத்துகிறது.
