தளபதி விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்க கோட் படம் தயாராகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் மீனாட்சி செளத்ரி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதுதவிர படத்தில் முன்னாள் ஹீரோயின்களான சிநேகா, லைலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது படத்தின் இன்னொரு ஹீரோயினாக கனிகாவும் இணைந்துள்ளார்.
நடிகை கனிகா, தனது இன்ஸ்டாவில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து கனிகா கோட் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், படக்குழுவினரும் அதை உறுதி செய்துள்ளனர்.
ஃபைவ் ஸ்டார் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கனிகா, மாதவனுடன் எதிரி, அஜித்துடன் இணைந்து வரலாறு படங்களில் நடித்தார். இதன் பின்னர் மலையாள படங்களில் கவனம் செலுத்திய அவர் அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2008இல் சாப்ட்வேர் என்ஜியரை திருமணம் செய்து கொண்ட கனிகாவுக்கு 13 வயதில் மகன் உள்ளார். குடும்பம், நடிப்பு என இரண்டையும் கவனித்து வருகிறார் கனிகா.
விஜய்யின் கோட் படத்தில் கனிகா எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும், அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
கோட் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் 2024ஆம் ஆண்டை ரசிகர்கள் குஷியுடன் வரவேற்கும் விதமாக புத்தாண்டு நாளில் வெளியிடப்பட்டது. படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என முற்றிலும் ஆங்கில வார்த்தைகளை கொண்ட தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கோட் என சுருக்கமாக அழைக்கப்பட்டு வருகிறது.
படத்தில் தளபதி விஜய் 19 வயது டீன் ஏஜ் பையன், இளைஞராக நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களில் புதிய போஸ்டரும், புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்து 2019இல் வெளியான ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அடிப்படையாக வைத்து தளபதி விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
1970களில் அமெரிக்காவில் போயிங் விமானம் ஒன்றை கடத்தி, பணத்தை திருடுவிட்டு எஸ்கேப் ஆன அடையாளம் தெரியாத ஹைஜேக்கர் டி.பி. கூப்பர். இவர் பணத்தை கொள்ளையடித்த பிறகு சிக்கி கொள்ளாமல் இருக்க பல்வேறு விஷயங்களை செய்துள்ளார். அந்த வகையில் பார்த்தால் விஜய், டி.பி. கூப்பர் போன்ற கதாபாத்திரத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் தோன்றுவார் என தெரிகிறது.
கோட் படம் 2024ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரவுள்ளது.
