தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தற்போது லியோ, கோட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில், விஜய்யின் 70வது படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் – ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைகிறது.
இந்தக் கூட்டணி இதற்கு முன்பு நண்பன் படத்தில் இணைந்தது. 3 இடியட்ஸ் என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக நண்பன் உருவாகியிருந்தது. அதன்பின்னர் மீண்டும் ஒரு மெகா பட்ஜெட் படத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி, விஜய் – ஷங்கர் இணையும் தளபதி 70 திரைப்படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகவுள்ளதாம். விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் அதனை மனதில் வைத்தே செம்ம மாஸ்ஸான கதையுடன் ஷங்கர் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் DVV என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தப் படத்தை DVV என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருந்தது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக விஜய்யும் அரசியலில் களமிறங்குவதை அபிஸியலாக அறிவித்துவிடுவார் எனவும், அதன்பின்னரே தளபதி 70 தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
விஜய் – ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தப் படம் அரசியல் ஜானரில் உருவாகவுள்ளதால், அது எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
