Wednesday, October 28, 2026

சினிமா வாய்ப்பிற்காக பிரபலங்களுடன் உறவு? பல உண்மையை உடைத்த நடிகை அனுயா!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சிவா மனசுல சக்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அனுயா குறித்து சமீபத்தில் வதந்தியான தகவல்கள் பரவின.

அந்த வதந்தி என்னவென்றால், நடிகை அனுயா பிரபலங்கள் பலருடன் உறவில் இருப்பதாகவும், அவர்களுடன் அனுயா டேட்டிங் செய்து வருவதாகவும், இதனால் தான் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ADVERTISEMENT

இந்த வதந்திகளுக்கு நடிகை அனுயா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் பேசியது,

“என்னை பற்றி என்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றி பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யான தகவல். நான் பிரபலங்களுடன் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியானதை நான் பார்த்தேன். குறிப்பாக விஜய் ஆண்டனி, சுந்தர் சி, ஜீவா ஆகியோருடன் நான் உறவில் இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை நான் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவலில் கொஞ்சம் கூட உண்மையில்லை. நான் இப்போது சிங்கிளாக தான் இருக்கிறேன்.”

அதனை தொடர்ந்து நெட்டிசன் ஒருவர் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கும் பதில் அளித்த நடிகை அனுயா,

“என்னை சுற்றி இருக்கும் ஆண்கள் யாரும் நல்லவர்கள் இல்லை. எனவே நான் அதன் காரணமாக தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.”

நடிகை அனுயாவின் இந்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT